×

திருவொற்றியூர் மண்டலத்தில் கழிவுநீர் அடைப்பு நீக்க ரூ.50 லட்சத்தில் இயந்திரம்

திருவொற்றியூர்; சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள 14 வார்டு குடியிருப்புகளில் இருந்து வரக்கூடிய கழிவுநீர், பாதாள சாக்கடை குழாய்கள் வழியாக ராட்சத கழிவு நீரேற்று நிலையங்களுக்கு கொண்டு சென்று, அங்கு நாள்தோறும் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில், சில இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கும் அவலநிலையும் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே, மனித கழிவுகளை மனிதனே அள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.இதன் காரணமாக, பாதாள சாக்கடை தொட்டிகளில் ஏற்படும் கழிவுநீர் அடைப்புகளை நீக்குவதற்கு ஜெட்ராடர் எனும் 7 நவீன கழிவுநீர் அடைப்பு நீக்கும் இயந்திரம், 10 தூர்வாரும் இயந்திரங்கள் திருவொற்றியூர் மண்டலத்தில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலத்தில் குடியிருப்புகளின் எண்ணிக்கை கூடுதலுக்கு ஏற்ப, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக ஒரு நவீன ஜெட்ராடர் மற்றும் தூர்வாரும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய செயற்பொறியாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் விஜயநிர்மலா முன்னிலை வகித்தார். இதில் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு பங்கேற்று, 2 புதிய நவீன இயந்திர வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் ஜெயராமன், இமானுவேல் திரவியம், கவிகணேசன், தமிழரசன், சுசீலா ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post திருவொற்றியூர் மண்டலத்தில் கழிவுநீர் அடைப்பு நீக்க ரூ.50 லட்சத்தில் இயந்திரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvoteur zone ,Thiruvottyur ,Chennai Corporation ,Thiruvottyur Zone ,Thiruvouteur zone ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...